குள்ளஞ்சாவடி அடுத்த பொட்டவெளி ரேஷன் கடையில் ஒரு நாள் மட் டும் மண்ணெண்ணெய் வழங்குவதால் காலை 6 மணி முதல் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கும் அவலம் உள்ளது.
குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் கிளை பொட்டவெளி ரேஷன் கடைக்குட்பட்ட பகுதியில் நாகம்மாள்பேட்டை, எஸ்.என்.நகர், சுப்ரமணியபுரம், தொண்டமாநத்தம், அக்ராவரம், பள்ளித் தெரு, எஸ்.புதுர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,050 ரேஷன் கார்டுகள் உள்ளது. ரேஷன் கடையில் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே மண்ணெண் ணெய் போடப்படுகிறது. இதனால் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு காலை 6 மணி முதல் பொது மக்கள் ரேஷன் கடையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில்,
"பொட்டவெளி ரேஷன் கடையில் ஒரு நாள் மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. எந்த நாள் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது என பொது மக்களுக்கு யாரும் தகவல் தெரிவிப்பதில்லை. ரேஷன் கடைவழியாக வருவோரிடம் கேட்டறிந்து மண்ணெண்ணெய் வாங்க வரவேண்டியுள்ளது. மேலும் அரிசியும் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களில் வந்து வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டிற்கு அந்த மாதம் மண்ணணெண்ணெய், அரிசி வழங்கமாட்டார்கள். இதனாலேயே மண்ணெண்ணெய் வாங்குவதற்கு பொது மக்கள் அதிகாலை 6 மணி முதலே வந்து வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மண்ணெண்ணெய் வாங்க வேண்டியுள்ளது' என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக