உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வரும் நிலையில் சிதம்பரம் காவல் கோட்டம்



சிதம்பரம்:
 
           சிதம்பரம் காவல் கோட்டத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகளால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
 
             சிதம்பரம் காவல் கோட்டத்தில் சிதம்பரம் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், கிள்ளை, புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், மருதூர் என 7 காவல் நிலையங்கள் உள்ளன. வாகன திருட்டு, வீடு புகுந்து திருட்டு, லாட்டரி சீட்டு விற்பனை, வழிப்பறி, குடிகாரர்களின் அட்டகாசம், கட்டை பஞ்சாயத்து உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் நடராஜர் கோயிலில் பெண்களிடம் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. புவனகிரி, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, பி.முட்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரே நாளில் பல கடைகளை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்றனர். 
 
              சமீபத்தில் லாரி டிரைவர் விஜயன் ரவுடிகள் கும்பலால் சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் கொலை செய்யப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்டார். போக்குவரத்து காவலர்கள் போதிய அளவில் இல்லாததால் போக்குவரத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. கீழரத வீதியில் இருபுறமும் நிறுத்தப்படும் சுற்றுலாப் பயணிகளின் பஸ்கள், வேன்கள் ஆகியவற்றால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலரத வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, எஸ்.பி.கோயில் தெரு, வேணுகோபால்பிள்ளை தெரு, போல்நாராயணன் தெரு, பஸ் நிலையம், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு தினந்தோறும் விபத்து நடைபெற்று வருகிறது.
 
            5 ஆண்டுகளுக்கு முன்பு குற்றங்கள் அதிகமாக  நடைபெறும் நகரமாக இருந்ததால் சிதம்பரம் கோட்ட காவல்துறைக்கு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டு வந்தார்கள். தற்போது மீண்டும் குற்றங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. எனவே சிதம்பரம் கோட்டத்துக்கு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களை மீண்டும் ஏஎஸ்பியாக நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.
 
இதுகுறித்து கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஷ் தெரிவித்தது: 
 
                 குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸ் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரவுடிகளின் பட்டியல்கள் எடுக்கப்பட்டு அவர்கள் உளவுத்துறை போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தாலும் அவர்கள் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீஸôர் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior