பண்ருட்டி:
பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டில் மணல் மேடுகளை மழைகாலம் துவங்கும் முன் அகற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி திருவதிகையில் கெடிலம் நதிக்கரையின் அணைக்கட்டு கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின் போது கட்டப்பட்டது. அணைக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து பிரிந்து வரும் மலட்டாறு கட்டமுத்துப்பாளையம், ராசாப்பாளையம் வழியாக திருவதிகை அணைக்கட்டில் சேரும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அணைக்கட்டு மூலம் வானமாதேவி உள்ளிட்ட 30 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு முறை வைத்து பாசனம் விடும் வகையில் அணை கட்டப் பட்டது. அணையின் மொத்தம் அளவு ஆற்றின் தரைத் தளத்தில் இருந்து ஆறு அடி அளவில் மட்டுமே இருந்தாலும் மழைக் காலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் 4 மாதம் அளவில் இருந்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்து வந்தது. மேலும் அணைக்கட்டு மூலம் பாசனம் பெறும் விவசாயிகளும் பெரிதும் பயன்பெற்று வந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அணைக்கட்டை பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு அதிகாரிகள் முற்றிலும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் அணைக் கட்டின் மொத்த உயரம் 6 அடியும் மணல் மேடுகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும் நீர் தேங்கி நிற்காலம் ஒருவாரத்திற்குள் முற்றிலும் வடிந்து வீணாகக் கடலில் சேர்ந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழைகாலம் துவங்கும் முன் அணைக் கட்டில் நீரை தேக்கி வைக்கும் அளவிற்கு மணல் மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக