உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

பண்ருட்டி தாலுகாவில் பட்டா, உதவித் தொகை வழங்காத தாசில்தாருக்கு "செமடோஸ்'

பண்ருட்டி: 

           பண்ருட்டி தாலுகாவில் முன்னுரிமைப்படி பட்டா, உதவித் தொகை வழங்காத தாசில்தார், நில அளவை அலுவலர்களை வருவாய்த் துறை செயலாளர் தனவேல் கடுமையாக சாடினார்.தமிழக வருவாய்த் துறை செயலாளர் தனவேல் நேற்று பண்ருட்டி தாலுகா அலுவலக துயர் துடைப்பு பிரிவில் பதிவேடுகளை ஆய்வு செய்தார். 

            அதில்  முன்னுரிமைப்படி விண்ணப்பித் தவர்களுக்கு உதவித் தொகை வழங்காதது குறித்து  தாசில்தார் மங்களத்திடம் கேள்வி எழுப்பினார். இதற்கு சரியான பதிலளிக்காததால் எரிச்சலடைந்த  தனவேல்,  மங்களம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அதேப்போல் பட்டா மாறுதல், பட்டா கோருதல் விண்ணப்பப் பதிவேடுகளில் கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கடந்த மாதம் கொடுத்த மனுக்கள் மீது மட்டும் பட்டா வழங்கியது எப்படி என  தலைமை நில அளவை அலுவலர் பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அவர் பதில் கூறாமல் பதிவேடுகளை காண்பிப்பதில் காலதாமதம் செய்தார்.இதனால் கடுப்பான தனவேல் "உங்களைப் பார்த்து பட்டா கேட்பவர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவீர்கள். மற்ற மனுக்கள் நிலுவையில் உள்ளதா? விசாரணையில் உள்ளதா? சான்று குறை உள்ளதா என பதிய மாட்டீர்கள். சம்பளம் வாங்குகிறீர்கள் அல்லவா? என சரமாரியாக "டோஸ்' விட்டார்.  

                   "வரும் செப் டம்பர் 15ம் தேதிக்குள்  ஆர்.டி.ஓ., நில அளவை உதவி இயக்குனர்  முழு அளவில் ஆய்வு செய்து 17ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior