பண்ருட்டி:
பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டு செயல் அலுவலர் சிவஞானத்திடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.பண்ருட்டி காந்தி சாலையில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் எல்.என்.புரத்தில் 2.77 ஏக்கர் உள்ளது.இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம் குத்தகைக்கு பயிர் செய்து வந்தார். நீண்ட நாள்களாக குத்தகை பாக்கி செலுத்தாததால் கடலூர் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வருவாய் நீதிமன்ற நீதிபதி, குத்தகை பாக்கி செலுத்தாத வழக்கறிஞர் ஆறுமுகத்திடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து வருவாய் நீதிமன்ற செயலக ஆய்வாளர் நிலத்தை கையகப்படுத்தி, ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் சிவஞானத்திடம் அண்மையில் ஒப்படைத்தார்.கையப்படுத்தப்பட்ட நிலத்தை வருவாய்த் துறை நில அளவர்கள் சனிக்கிழமை அளவீடு செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக