பரங்கிப்பேட்டை :
அரசு மருத்துவமனை ஊழியர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து பரங்கிப்பேட்டை முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை மருந்தாளுனர் அருள்பிரகாசம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதையடுத்து பரங்கிப் பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுவால் பரவும் காய்ச்சலை தடுப்பதற்காக பரங் கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொசு மருந்து அடிக்க மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரா உத்தரவிட்டார். அதையடுத்து நேற்று முன்தினம் இரவு வாகனத்தில் பொருத்தப்பட்ட புகை தெளிப்பான் இயந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது. இந்த பணியை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத்தார். மேலும் பரங்கிப் பேட்டை அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்க அனைவருக்கும் ரத்தம் மாதிரி எடுத்து ஓசூர் ரத்த பரிசோதனை மையத் திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக