உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

பேரூராட்சி எதிரில் கழிவு நீர் தேக்கம் ஆழ்துளை கிணறு மாசுபடும் அபாயம்

நெல்லிக்குப்பம் :

                  மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே பழமையான கரையான் குட்டை உள்ளது. இக்குட்டையை பல ஆண்டுகளாக தூர்வாராததால் அருகில் வசிக்கும் மக்கள் ஆக்ரமிப்பு செய்தனர். பேரூராட்சி பகுதியில் வெளியேறும் கழிவுநீர் இக்குட்டையில் சேருகிறது. குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேற வழியில்லாததால் கழிவுநீர் அங்கேயே தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியிடமாக மாறியுள்ளது. குளம் முழுவதும் ஆகாயத்தாமரை செடி படர்ந்து மூடியுள்ளது. கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதால் அருகில் வசிக்கும் மக்களை பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. அருகிலேயே பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறு உள் ளது. குளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அருகிலுள்ள குடிநீர் ஆழ்துளை கிணறும் மாசுபடும் அபாயம் உள்ளது.பேரூராட்சி அலுவலகத்துக்கு எதிரிலேயே அவலமான நிலையில் குப்பையில் கழிவுநீர் தேங்கியுள்ளது.குளத்தை தூர்வாரி கழிவுநீர் கலக்காமல் மழைநீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior