கடலூர்:
பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனியில் நடந்த மோதல் தொடர்பாக, போலீஸôர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர். கடந்த 17-ம் தேதி ஒரு பெண்ணைக் கேலி செய்தது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலைத் தடுக்க போலீஸôர் வந்தனர். இதில் இரு போலீஸ் காவலர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக பண்ருட்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சிலரைக் கைது செய்து உள்ளனர்.இப்பிரச்னை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு.திருமாறன், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பது:÷செட்டிப்பட்டறைக் காலனியில் 17-ம் தேதி நடந்த மோதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போலீஸôர் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து, சிலரைக் கைது செய்து உள்ளனர்.
எனினும் செட்டிப்பட்டறைக் காலனியில் மட்டும் போலீஸôர் இரவு பகலாக ரோந்து சுற்றி வந்து பலரைத் தேடுகிறார்கள். இதில் போலீஸôர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார்கள். 20-ம் தேதி காவல்துறைகண்காணிப்பாளரைச் சந்தித்து மோதல் தொடர்பாக மேல்நடவடிக்கை வேண்டாம், இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரினோம்.÷ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக