கடலூர்:
கடலூரில் திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்து திரும்பிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 2 பெண்கள் இறந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் (இந்தியக் கம்யூனிஸ்ட் ஆதரவு) கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்த வடக்குப் பாளையத்தில் இருந்து வந்திருந்தவர்கள், மினி லாரி ஒன்றில் ஊர் திரும்பினர். மினி லாரி குள்ளஞ்சாவடியை அடுத்த பெத்தநாயக்கன் குப்பம் அருகே சென்றுக் கொண்டு இருந்தபோது, லாரியின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதனால் அதில் பயணம் செய்த சின்னப்பனின் மனைவி அற்புதமேரி (40), ராயர்பிள்ளையின் மனைவி இருதயமேரி (49) ஆகியோர் பலத்தக் காயம் அடைந்தனர். கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் இறந்தனர்.÷காயமடைந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன், அய்யப்பன் எம்எல்ஏ, நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் டி.மணிவாசகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக