கடலூர் :
தமிழ்நாடு அரசு நீச்சல் குள பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். சத்துணவு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன், ஜாஸ்மின் மாநில தலைவர் சிங்காரம், நீச்சல் குள பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் குமரேசன், இணை செயலாளர் கலைவாணன், சரவணன், ராஜாமணி, நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வரும் உயிர் காப்பாளர்கள், பம்பு ஆபரேட்டர், தோட்ட பராமரிப்பாளர் மற்றும் துப்புரவாளர் ஆகிய பணிகளில் ஈடுபடும் 150 நீச்சல் குள பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு மற்றும் குடும்ப நல திட்டத்திலும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக