உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

சொட்டு நீர் பாசன விவசாயிகள் அதிர்ச்சி! அரசின் தவறான தகவலால் வேதனை

நெல்லிக்குப்பம் :

                 தமிழக அரசின் தவறான தகவலால் சொட்டுநீர் பாசன விவசாயிகள் வேதனை அடைந்துள் ளனர். தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளுக்கு முன் பு ஏரி, குளங்கள் இல்லாத ஊர்களே இல்லை என்ற  நிலை இருந்தது. மழைக்காலங்களில் ஏரி, குளங்களில் சேரும் நீர் ஆண்டு முழுவதும் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆழ் துளை கிணறுகளில் மின் மோட்டார் மூலம் விவசாயம் நல்ல முறையில் நடந்தது. நாளடைவில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்வழிகளை விவசாயிகளும், மக்களும் ஆக்கிரமித்தனர். பல ஆயிரம் ஏரி, குளங்கள் காணாமல் போயின. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதித்தது. ஆற்றில் நடக் கும் மணல் கொள்ளையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. மின் பற்றாக்குறையால் விவசாயம் செய்வதை பலர் தவிர்த்து பிளாட் போட நிலங்களை விற்க துவங்கினர். மொத்த விவசாய நிலப்பரப்பில் 25 சதவீதம் மனைகளாகவும், தரிசு நிலங்களாகவும் மாறின. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், இலவசங்களால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. கரும்பு போன்ற பயிர்களுக்கு நடவு முதல் அறுவடை வரை வேலை ஆட்கள் அதிகம் தேவை. தண்ணீர் பாய்ச்சுவது, உரம் வைப்பது போன்ற பணிகளும் மிகவும் சிரமம்.

                வழக்கமான இரண் டரை அடிக்கு பதிலாக ஐந்தடி இடைவெளியில் கரும்பு நட பரிந்துரை செய் தனர். அவ்வாறு நடவு செய்தால்  சிறிய டிராக்டர் மூலம் களை எடுத்தல், மண் அணைத்தல் பணிகளை செய்ய முடியும். இம்முறையையும் தண்ணீர் பாய்ச்சுவது, உரமிடுதல் சிரமமானது. இதை தவிர்க்க கரும்பு பயிரில் சொட்டுநீர் பாசனம் செய்ய பரிந்துரை செய்தனர். சொட்டுநீர் பாசன முறையில் கரும்பு நடவு செய்தால் இடைவெளியில் களை வளராது. உரமிடுதல் எளிது. தண்ணீர் பாய்ச்சுவதும் சுலபம். இயந்திரம் மூலம் அறுவடை செய்யலாம். இதன் நன்மைகள் கருதி சொட்டுநீர் அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டினர். ஒரு ஏக்கரில் சொட்டுநீர் முறை அமைக்க 43 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதில் பில்டர் டேங்க், உர டாங்குகள் பொருத்தப்படும். கூடுதலான ஏக்கரில் அமைத்தால் இந்த டாங்குகள் செலவு குறையும். சொட்டுநீர் அமைக்க அதிகம் செலவாவதால் வேலை குறைவாக இருந் தாலும் அம்முறைக்கு செல்ல விவசாயிகள் தயங்கினர். அதனையொட்டி அரசு சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவித்திட ஐம்பதில் இருந்து 65 சதவீதமாக மானியத்தை உயர்த்தியது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சொட்டுநீர் கம்பெனிகளை அணுகியவுடன்தான் அதிர்ச்சியடைந்தனர்.

                    ஒரு ஏக்கரில் சொட்டுநீர் அமைக்கும் செலவில் 65 சதவீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய் இதில் எது குறைவோ அத்தொகையே மானியமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அங்கீகரித்து சொட்டுநீர் கம்பெனி உதிரி பாகங்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்கிறது. ஒரு ஏக்கருக்கு 43 ஆயிரம் செலவாகிறது. 65 சதவீதம் மானியம் என்றால் 28 ஆயிரம் ரூபாய் வருகிறது.

               அரசு தருவதோ 14 ஆயிரத்து 500 மட்டுமே. அரசு அறிவித்து 65 சதவீத மானியத்தை எந்த கட்டுபாடும் இல்லாமல் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடியும். தமிழக அரசு பரிசீலனை செய்து முறையாக 65 சதவீத மானியம் கிடைக்க வழி செய்தால் மட்டுமே அழிவின் விளிம்புக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior