உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

அதிமுக,​​ மதிமுக​ வெளி​நடப்பு

கடலூர்:​ 

                   கடலூரில் திங்கள்கிழமை நடந்த மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.​ மற்றும் ம.தி.மு.க.​ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கடலூர் மாவட்ட ஊராட்சியின் மொத்த உறுப்பினர்கள் 29.​ இவர்களில் தி.மு.க.​ 12,​ அ.தி.மு.க.​ 11,​ பா.ம.க.​ 5,​ ம.தி.மு.க.​ 1.​ மாவட்ட ஊராட்சித் தலைவராக இரா.சிலம்புச் செல்வி ​(பா.ம.க.)​ இருந்து வருகிறார். மாவட்ட ஊராட்சியின் சாதாரணக் கூட்டம் திஙகள்கிழமை சிலம்புச் செல்வி தலைமையில் நடந்தது.​ இக்கூட்டத்துக்கு,​​ வந்திருந்த அ.தி.மு.க.​ உறுப்பினர்கள் 11 பேர் ம.தி.மு.க.​ உறுப்பினர் ஒருவர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு குறித்து உறுப்பினர்கள் கந்தசாமி ​(ம.தி.மு.க.)​ கருப்பன் ​(அ.தி.மு.க.)​ உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களிடையே பாரபட்சம் காட்டப்படுகிறது.​ தி.மு.க.,​​ மற்றும் பா.ம.க.​ உறுப்பினர்களின் வார்டுகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.​ அ.தி.மு.க.,​​ ம.தி.மு.க.​ உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கப்படுகிறது.

         இதனால் எங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.​ இந்த நிதி ஆண்டுக்கு பிற்பட்டப் பகுதிகள் முன்னேற்றத் திட்டத்துக்கு மத்திய அரசால் கடலூர் மாவட்ட ஊராட்சிக்கு ரூ.​ 2 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் அ.தி.மு.க.,​​ மற்றும் ம.தி.மு.க.​ உறுப்பினர்கள் 12 பேரின் வார்டுகளுக்கு ரூ.​ 36 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.​ தி.மு.க.​ மற்றும் பா.ம.க.​ உறுப்பினர்கள் 17 பேரின் வார்டுகளுக்கு ரூ.​ 1.64 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.÷இவ்வாறு பாரபட்சம் காட்டப்படுவதால் எங்கள் வார்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.​ கடந்த 12 ஆண்டுகளில் மாவட்ட ஊராட்சி மூலம் ரூ.​ 7 கோடிக்கு வேலைகள் நடந்துள்ளன. இதிலும் அ.தி.மு.க.,​​ ம.தி.மு.க.​ உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மிகக் குறைவான நிதிதான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.​ இந்த பாரபட்சமான நிலையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து இருக்கிறோம்.÷தொடர்ந்து இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.​ 

இது குறித்து மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி​ கூறியது:

                         அவர்கள் வெளிநடப்பு செய்தாலும்,​​ கூட்டம் கோரம் இருந்ததால் தொடர்ந்து நடைபெற்றது.​ மன்ற உறுப்பினர்களிடையே நான் பாரபட்சம் காட்டவில்லை.​ அ.தி.மு.க.,​​ ம.தி.மு.க.​ உறுப்பினர்கள் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அனைவருக்கும் அவர்கள் அளிக்கும் பணிகளுக்கு ஏற்பதான் நிதி ஒதுக்கப்படுகிறது என்றார் சிலம்புச் செல்வி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior