கடலூர் :
மோட்டார் பைக்கை திருடிய வாலிபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
வாழப்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடலூரில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, கடலூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில், கம்பெனி பணம் 2.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, மோட்டார் பைக்கின் டேங்க் கவரில் வைத்துள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த ஒருவர் உங் கள் பணம் கீழே கிடக்கிறது என கூறவே, வெங்கடேசன் கீழே கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்துவிட்டு, டேங்க் கவரை பார்த்த போது பணம் காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். புகாரின் பேரில் கடலூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆந் திரா மாநிலம் ஓ.ஜி., குப் பத்தை சேர்ந்த கோவிந் தசாமி மகன் குமார்(22) பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் குமாரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ், குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக