காட்டுமன்னார்கோவில் :
குடும்ப அட்டைகளை தகுதி நீக்கம் செய்ததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் திடீர் பரபரப்பு ஏற் பட்டது.
காட்டுமன்னார்கோவிலை அடுத்த கருப் பேரி, குஞ்சமேடு கிராமங்களில் உள்ள 80 பேர் அங்குள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில் இரு கிராமத்தைச் சேர்ந்த80 பேரின் குடும்ப அட்டைகள் நீக்கம் செய் யப்பட்டதால், இவர்களுக்கு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை கருப்பேரி மற்றும் குஞ்சமேட்டைச் சேர்ந்த 80 பேர் காட்டுமன்னார் கோவில் தாசில் தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்டவர்களிடம் தாசில்தார் வீரபாண்டியன் பேச்சுவார்தை நடத்தினார். பின்னர் குடும்ப அட்டைகள் நீக்கம் குறித்து விசாரணை செய்து மீண்டும் உங்களுக்கு ரேஷன் பொருட் கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக