சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இன்ஜினிரியங் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப் பட்ட அரங்கை துணைவேந்தர் திறந்து வைத்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இன்ஜினிரியங் கல்லூரியில் 1950-56ல் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பாக 20 லட்சம் ரூபாய் செலவில் அரங்கம் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு பதிவாளர் ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். இன்ஜினிரியங் புல முதல்வர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் ராமநாதன் அரங்கை திறந்து வைத்தார். முன்னதாக மரம் நடுதல், ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம், அன்னதானம், ராணி சீதை ஆச்சி பள்ளியில் சுத்திகரிப்பு குடி நீர் பிளாண்ட், மாணவர்களுக்கு பயிற்சி பட்டரை, நலத்திட்டங்கள் ஆகியன நடந்தது. முன்னாள் மாணவர்கள் குழுவின் தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் ஆனந்தராஜன், பொருளாளர் சுப்ரமணியன், பால்பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், ராஜாராம் ஆகியோர் விழா ஏற்பாட்டினை செய்தனர். ஒரு லட்சம் ரூபாயில் இன்ஜினியரிங் நூல்கள், ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் பயிலும் மாணவி ஒருவருக்கு உதவி தொகை வழங்க அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக