ராமநத்தம் :
கீழக்கல்பூண்டியில் உழவர் மன்றம் சார்பில் முத்து சோள பயிர் களை பயிரிட வலியுறுத்தி வயல் திருவிழா நடந்தது.
கீழக்கல்பூண்டி உழவர் மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உழவர் மன்ற தலைவர்கள் ஆலத்தூர் ரவிச்சந்திரன், மேலக்கல்பூண்டி விஜயகுமார் முன்னிலை வகித்தனர். கீழக்கல்பூண்டி உழவர் மன்ற பொருளாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணி விழாவினை துவக்கி வைத்து விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், அரசு வழங்கும் மானியங்கள் குறித்தும் விளக்கினார். நாமக்கல் மாவட்ட சின்ஜெண்டா மக்காச் சோள நிறுவன அதிகாரிகள் மானாவாரி நிலங்களில் மக்கா சோள பயிர் களை பயிரிடுவது, அதன் மூலம் அதிகளவு வருவாய் ஈட்டுவது குறித்து விளக்கினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக