கடலூர்:
ஆறாவது ஊதிய குழுவில் உள்ள பாதக அம்சங் கரை நீக்கக் கோரி கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். ஆறாவது ஊதிய குழுவில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு எதிராக உள்ளவற்றை நீக்க வேண் டும். ஊழியர்களுக்கு இலாக்கா அந்தஸ்து தரவேண்டும். ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும். வயது மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு, இலாகாவுக்கு இணையான போனஸ் வழங்க வேண் டும். முழு தொழிற் சங்க உரிமை மற்றும் சலுகை வழங்க வேண்டும். விடுப்பு கால சலுகைகள் சி.எல்., இ.எல்., எம்.எல்., வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத் திந்திய ஊரக அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கடலூர் கோட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் காந்தி வாழ்த்துரை வழங்கினர். ராஜேந்திரன், கோட்ட உதவி தலைவர் ரட்சகர் கோரிக்கைகளை விளக்க பேசினர். ஜேம்ஸ் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக