கடலூர்:
மாநிலத்தில் முதல் முறையாக மானிய விலையில் நெல் அறுவடை இயந்திரம் கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை வழங்கப்பட்டது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் வழங்கினார்.
கடலூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள் 6 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதற்காக அரசு வழங்கும் மொத்தம் மானியம் ரூ. 5.58 லட்சம்.÷நெல் அறுவடை இயந்திரம் ஒன்று, களை எடுக்கும் இயந்திரம் ஒன்று, நடவு இயந்திரம் ஒன்று, சுழல் கலப்பை இயந்திரம் 3 வழங்கப்பட்டன. அறுவடை இயந்திரம் நடப்பு ஆண்டில் மாநிலத்தில் முதல் முறையாக கடலூரில் அரசு மானியத்தில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ரூ. 13.77 லட்சம் மதிப்புள்ள அறுவடை இயந்திரம் ரூ. 4 லட்சம் மானியத்தில் டி.குமராபுரம் செந்திலுக்கு வழங்கப்பட்டது. ஏனைய வேளாண் இயந்திரங்கள் புதுக்குப்பம் சதாசிவம், தாணூர் ஆதிகேசவலு, சேடப்பாளையம் சண்முகம், கிளிஞ்சிக்குப்பம் பத்மநாபன், தூக்கணாம்பாக்கம் சேகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அரியபூபதி, உதவி செயற்பொறியாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக