உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

10 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களும்...செயல்படுமா!: கடலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு


சிதம்பரம்: 

                        கடலூர் மாவட்டத்தில் 10 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இருந்தும் இரண்டு மட்டுமே இயங்குவதால் விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், வேர்க்கடலை, பயறு வகைகள் உள்ளிட்ட பொருட்களை சிரமம் இன்றி நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும், இடைத்தரகர்கள் இன்றி வாங்கி செல்ல வசதியாக வேளாண் துறை சார்பில் ஒழுங்கு முறை விற்பனை கூடங் கள் திறக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் கடலூர் முதுநகர், விருத்தாசலம், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, பெண்ணாடம், தொழுதூர், காட்டுமன்னார்கோவில் ஆகிய
 
                        10 இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இயங்கி வருகிறது. ஆனால் தற்போது விருத்தாசலம், பண்ருட்டியில் முழுமையாகவும், கடலூர் முதுநகரில் வேர்க்கடலையும், திட்டக்குடியில் சோளம் சீசனில் மட்டுமே செயல்படுகிறது. மற்ற இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் செயல்பாடின்றி பெயரளவில் உள்ளது. காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, சேத்தியாத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகளே வருவதில்லை. இதனால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

                    உதாரணமாக சிதம்பரத்தில் கடந்த 1963ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி ஒழுங்கு முறை விற்பனை கூடம் துவங்கப்பட்டது. ஆனால் இதன் செயல்பாடு படிப் படியாக குறைந்தது. நேரடி கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொரு பகுதியிலும் திறக்கப்பட் டது ஒரு காரணமாக இருந் தாலும், சொந்த இடத்தில் விற்பனை கூடம், உலர் களம், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பயன் தரும் வகையில் அடிப் படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

                         இதனால் பொருட்கள் வரத்து நின்றதால் சில ஆண்டுகள் மட்டுமே செயல்பட்ட விற்பனை கூடம் கடந்த 35 ஆண்டுகளாக இயங்காமல் பெயர் பலகை மட்டுமே தொங்குகிறது. விற்பனை கூடத் திற்கு வெளியே நடக்கும் வணிகத்திற்கு விற்பனை கட்டணம் வசூல் செய்து, அந்த தொகையை அண்ணா கலையரங்கில் உள்ள இயங்காத உழவர் சந்தைக்கும், அதன் நிர்வாக செலவுகளுக்கும் தற் போது செலவு செய்து வருவதாக வர்த்தக சங்கத்தினரும், விவசாயிகளும் புலம்புகின்றனர். சிதம்பரம் அண்ணா கலையரங்கில் கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி உழவர் சந்தை, 12 லட்சம் ரூபாய் செலவில் ஒழுங்கு முறை விற்பனை கூட கிடங்கு, மற்றும் 3 லட்சம் ரூபாய் செலவில் உலர்களம் ஆகியவற்றிக்கு அப்போதை வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அடிக்கல் நாட்டினார். ஆனால் அனைத்தும் கல்வெட்டாக காட்சியளிக்கிறது.

                         வேளாண் விற்பனை கூடத்தில் அரசு அறிவித்த 16 வகையான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய குறைந்தது 5 ஏக்கர் இடம் தேவை. ஆனால் தற்போது எளிதில் அழுகக்கூடிய காய்கறி, பழங் கள் என மொத்தம் 103 வகையான பொருட்களை விற்பனை செய்ய வேளாண் துறை அறிவித் துள்ளது. இதற்காக குறைந் தது 10 ஏக்கர் இடமாவது தேவைப்படும். ஏற்கனவே சொந்த இடமின்றி, இடப்பற்றாக்குறையால் இயங்காமல் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு இந்த அறிவிப்பு எப்படி பொருந்தப் போகிறது என்பது தான் புரியாத புதிர். மேலும், ஒழுங்கு முறை விற்பனை கூட அலுவலகம் இயங்கி வரும் அண்ணா கலையரங்கம் சிதம்பரம் நகரின் விஸ்தாரமான இடமாகும். இந்த இடத்தில்தான் பொதுக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. ஆனால் இங்கு செயல்படாத உழவர் சந்தை, திறக்கப்படாத எம்.எல்.ஏ., அலுவலகம், இயங்காத ஒழுங்கு முறை விற்பனை கூடம், வாகன நிறுத்தம் என அனைத்தும் செயல்பாடாதநிலையே காணப்படுகிறது. வேளாண் துறை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்கு முறை விற்பனை கூடங்களும் இயங்கும் வகையில் நிரந் தர வசதிகளுடன் ஒழுங்கு முறை விற்பனை கூடங் கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior