சிதம்பரம்:
சிதம்பரம் அருகே 57 குடிசைகள் திங்கள்கிழமை இரவு தீப்பற்றி எரிந்து சாம்பலாயின . சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த மார்ச் 26-ம் தேதி 64 குடிசைகள் அமைக்கப்பட்டு தொல்காப்பியன் நகர் என பெயரிடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திருமாறன் இதனை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இக்குடிசைகள் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் தீவிபத்தில் 57 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.எஸ்.பி. நேரில் விசாரணை: விஷமிகளின் நாசவேலை காரணமாக குடிசைகள் தீப்பற்றியிருக்கலாம் எனக் கூறப்பட்டதால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மற்றொரு தீவிபத்து: சிதம்பரம் தேரடிபிள்ளையார்கோயில் தெருவில் உள்ள செல்வம் என்பவரது ஒர்கஷாப் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அருகில் உள்ள கலியபெருமாள் வீட்டிலும், வள்ளிக்கந்தனின் மரப்பட்டறையிலும் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன
downlaod this page as pdf