உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

பயன்பாட்டிற்கு வராத புறவழிச்சாலையில் செல்லும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துகள்

 பரங்கிப்பேட்டை: 

                     சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் வெள்ளாற்று பாலம், சாலை பணி முடிவடையாத நிலையில் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சிதம்பரம் அடுத்த பு.முட்லூரில் இருந்து வண்டிகேட் வழியாக கடவாச்சேரிக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. பு.முட்லூரில் இருந்து சி.முட்லூரை இணைக்கும் வகையில் வெள் ளாற்றில் புதியதாக பாலம் கட்டப்பட்டுள்ளது.

                   சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து சி.முட்லூர் வரை சாலைப்பணி ஓரளவு முடிந்துள்ளது. வெள்ளாற்று பாலத்தை இணைக்கும் வகையில் இரவு பகலாக பணிகள் நடக்கிறது. பாலம் கட்டும் பணி மட்டுமே முடிந்து சாலை அமைக்கும் பணி முடியாத நிலையில் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இவ்வழியே சென்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதியில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு விரைவு பஸ் சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக செல்லாமல் வெள்ளாற்று பாலத்தின் வழியாக பணி முழுமை பெறாத சாலை வழியே செல்கிறது. தற்போது தனியார் பஸ் டிரைவர்கள் இந்த வழியை பயன்படுத்துகின்றனர். இதனால் பெரும்பாலான பஸ்கள் புவனகிரிக்கு செல்லாமல் புறவழிச்சாலை வழியாக சிதம்பரம் செல்கிறது.

                         இதன் காரணமாக பயணிகள் சிதம்பரம் சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து வரும் நிலை ஏற்படுகிறது. மேலும் புவனகிரி வழியாக பஸ் செல்லாது என கூறி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி பணிகள் முடிந்தும் முடியாத புறவழிசாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளும் வேகமாக செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை போக்க புறவழிச்சாலை பணிகள் முடியும் வரை அந்த சாலையை இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு முழுமையாக அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior