உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

'பிள்ளைகளிடம் தாய் தந்தையர் ஜீவனாம்சம் கேட்கலாம்'

 கடலூர்:

                     தாய் தந்தையர் மற்றும் முதியோரைப் பறக்கணிப்பது சட்டப்படி குற்றமாகும்.​ போதுமான பொருளாதார வசதி இல்லாதபோது பிள்ளைகளிடம் தாய்,​​ தந்தையர் ஜீவனாம்சம் கோரிப்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                            தாய் தந்தையர் மற்றும் முதியோரைப் புறக்கணிப்பது சட்டப்படி குற்றமாகும்.​ தாய் தந்தையர் தங்களைப் பராமரித்துக் கொள்ள போதிய பொருளாதார வசதி இல்லாதபோது,​​ இச் சட்டத்தின்படி முதியோர் தங்களது மகன்,​​ மகள்,​​ பேரன்,​​ பேத்தி ஆகியோரிடமும் மற்றும் முதியோர் வாரிசு இன்றி இறக்கும்போது,​​ அவர்களின் சொத்தை,​​ வாரிசு என்ற முறையில் யார் அடைவார்களோ அவர்களிடம் ஜீவனாம்சம் கேட்கலாம்.ஜீவனாம்சம் கோரும் மனுவை அதற்கென நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களிடம் அளிக்கலாம்.​ வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது.​ மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது.​ மேலும் மாவட்ட சமூகநல அலுவலர்கள் ஜீவனாம்ச அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.மனுதாரர் கோரினால் அவர் தீர்ப்பாயத்தில் ஆஜராகி உதவி புரிய வேண்டும்.​ மாவட்ட சமூகநல அலுவலர் சமரச அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.​ இச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு கோருவோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.​ மாவட்ட அளவில் மாவட்ட சமூகநல அலுவலரையும்,​​ வட்டார அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக சமூக நல விரிவாக்க அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம். தனியாக வசிக்கும் முதியோர்,​​ சொத்துக்களைப் பாதுகாத்தல் தொடர்பாக காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.​ அனைத்து முதியோர் இல்லங்களும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior