உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு மின் தடை நேரத்தில் மாற்றம் தேவை


திட்டக்குடி: 

                       திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மின்நிறுத்த நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். திட்டக்குடி தாலுக்காவின் தலைமையிடமான திட்டக்குடி நகர்ப்புறத்திலுள்ள 18 வார்டுகளிலும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு எதிர் புறம் 4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட் டுள்ளது. இது தவிர இளமங்கலத்தில் 30 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்திலும், பெரியார் நகரில் ஒரு லட்சத்திலும், வதிஷ்டபுரத்தில் 2.5 லட்சத்திலும், கோழியூரில் ஒரு லட்சத்திலும் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மோட்டார் இணைப்புடன் இயங்கி வருகின்றன. இந்நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் காலை 6 முதல் 8 மணி வரைக்கும் மாலை 4 முதல் 5 மணி வரைக்கும் முறையே தண்ணீர் விநியோகிக்கப்பட்டு, குடிநீர் சப்ளை வழங்கப்பட்டு வருகின்றது.

                        இதில் திட்டக்குடி நகர்ப்புறத்திலுள்ள 4.5 லட் சம் கொள்ளளவுடைய நீர்த் தொட்டிக்கு மட்டும் ராட் சத ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு, மின்இணைப்பு இல்லாத நேரத்திலும் தண்ணீர் வழங்கப்படுகிறது. மற்ற குடிநீர் தொட்டிகள் ஜெனரேட்டர் வசதியின்றி மின்இணைப்பு இல்லாத நேரத்தில் தண்ணீரை மேலேற்ற முடியாமல், உரிய நேரத்தில் குடிநீர் சப்ளை வழங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், திட்டக்குடியில் மதியம் 12 முதல் 3 மணி வரையிலும் மின்இணைப்பு துண்டிக்கப்படுவதால், மாலை வேளையில் நகர்ப்புற மக்களுக்கே குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மின்துண்டிப்பு நேரத்தை காலை 8 முதல் 11 மணி வரை மாற்றியமைத்தால் காலை மற்றும் மாலை வேளைகளில் தடையின்றி குடிநீர் சப்ளை வழங்க முடியும்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior