உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

ஆட்சியர் தலைமையில் அமைதிக் கூட்டம்

 கடலூர்:

                        கடலூர் அருகே வழிசோதனைப் பாளையம் கிராமத்தினருக்கும்,​​ நாயக்கர் நத்தம் காலனி மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பாக,​​ அமைதிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் திங்கள்கிழமை மாலை நடந்தது. இரு பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்களிடையே தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது.​ இதில் இரு தரப்பிலும் 10 வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.​ மற்றும் வைக்கோல் போர்கள்,​​ மோட்டார் கொட்டகைகள்,​​ கொளுத்தப்பட்டன.​ ​ வாழைத் தோட்டங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. மோதல் தொடர்பாக இதுவரை 120 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.​ இருதரப்பிலும் 46 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.​ அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.​ ​ 

                       எனினும் பதற்றம் நீடித்து வருகிறது.இந்நிலையில் திங்கள்கிழமை 2-வது முறையாக அமைதிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் நடந்தது.​ நாயக்கர் நத்தம் காலனி மக்கள் சார்பில் கடலூர் நகராட்சித் தலைவர் தாமலைச்செல்வன் தலைமையில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.​ ​ வழிசோதனைப் பாளையம் கிராம மக்கள் சார்பில் காசிராஜன் தலைமையில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆட்சியரின் ஆலோசனையின் பேரில் இரு தரப்பிலும் தலா 5 பேர் கொண்ட சமாதானக்குழு அமைக்கப்பட்டது.​ எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இக்குழுவிடம் புகார் தெரிவித்து தீóர்வு காணப்பட வேண்டும் என்று மாவட் ஆட்சியர் அறிவுறுத்தினார்.​ அதை இரு தரப்பினரும் ஏற்று சமாதானமாகப் போவதாக உறுதி அளித்தனர்.தீவைத்து கொளுத்தப்பட்ட வீடுகளுக்குப் பதில் புதிய வீடுகள் கட்டித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.​ கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன்,​​ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior