உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் 12 ஊராட்சிகளில் 47,221 வீடுகள் கணக்கெடுப்பு கலெக்டர் சீத்தாராமன் தகவல்

 கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 19 ஊராட்களில் 47,221 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித் துள்ளார். 

இதுகுறித்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு : 

                     கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்து வருகிறது. இதற்கான ஆய்வுக் கூட்டம் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் மற்றும் சப் கலெக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள், தாசில்தார்கள், பி.டி.ஓ.,க்கள் உள்பட 80 பேர் பங்கேற்றனர்.

                         கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் சந்தேகங்கள், பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் துல்லியமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர் 'இத்திட்டம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் உள்ள 405 கிராமங்களில் நடக்கிறது. இதுவரை 47,221 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 19 கிராமங்களில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.மக்கள் விழிப்புடன் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கணக்கெடுக்கும் பணிக்குழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என பேசினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior