உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்க வங்கிகள் மூலம் கடன் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேச்சு

 கடலூர்: 

                     மாற்றுத் திறனாளிகள் சுயமாக தொழில் துவங்க வங்கிகள் மூலம் கடன் பெற அரசு உதவி செய்து வருகிறது என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். கடலூர் புதுப்பாளையம் ஒயாசிஸ் மாற்றுத் திறனாளிகள் பள்ளி ஆண்டு விழா நடந்தது.  மாவட்ட மாற்றுத் திறனுடையோருக்கான நல அலுவலர் சீனுவாசன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை ராதிகா வரவேற்றார். வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம் முன்னிலை வகித்தார். ஒயாசிஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் குமுதம் ஆண்டறிக்கை படித்தார். விழாவில் ஸ்டார் மகாவீர் ஜூவல்லரி சுசில்குமார் மேத்தா, சங்கர், கடலூர் பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தர்ராஜன், பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பு தலைவி ரேணுகா  உட்பட பலர்  பங்கேற்றனர்.  

விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி எம்.எல்.ஏ.,  அய்யப்பன் பேசியதாவது:  

                 தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்  வேறு உதவிகளை செய்து வருகின்றது. அந்தத் துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் கருணாநிதி நேரடி கட்டுப்பாட்டில் வைத்து உதவிகள் செய்து வருகிறார்.  இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உணவுக்காக ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய் வழங்கி வருகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கி வந்த 400 உதவித் தொகையை உயர்த்தி 500  ரூபாயாக வழங்குகிறது. பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி தாமதமாக வழங்கக் கூடாது என்பதற்காக முதலில் இது போன்ற பள்ளிகளுக்கு   வழங்கிவிட்டு பிறகுதான் மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. சராசரி மனிதர்களை போல் இவர்களுக்கும் வாழ்க்கையில் விவசாயம், தொழில், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்த அரசு பல்வேறு உதவிகள், சலுகைகளை வழங்குகிறது. மேலும், இவர்களுக்கு சுயமாக தொழில் துவங்க வங்கிகள் மூலம் கடன் பெற அரசு உதவி செய்து வருகிறது. இந்த பள்ளி சிறப்பாக பணியாற்றியதற்காக துணை முதல்வர் ஸ்டாலினிடம் பரிசுகள் பெற்றது பள்ளிக்கு மட்டும் பெருமை அல்ல கடலூர் நகருக்கும் பெருமை. மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் முன்னேற்றத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யத் தயராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior