உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

அரசு நலத்திட்டங்கள் யாவும் இலங்கை அகதிகளுக்கும் வழங்கப்படும்: கலெக்டர்

 கடலூர்: 

              அரசு நலத் திட்டங்கள் யாவும் இலங்கை அகதிகளுக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு தினக் கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது. குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 320 மனுக்கள் வரப்பெற்றது.  மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் திருமண உதவி திட்டத்தின் கீழ் 31 நபர்களுக்கு தலா 20 ரூபாய் வீதம் 6.20 லட்சம் காசோலையும், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 நபர்களுக்கு 27 ஆயிரத்து 290 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் எவிலின், சிவகாமிக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால் உபகரணங்களையும் கலெக்டர் வழங்கினார். மேலும் கலெக்டர் தன் விருப்ப நிதியிலிருந்து சிறப்பு குழந்தைகள் காப்பக அரங்கிற்கு 24 ஆயிரத்து 355 மதிப்பிலான ஆம்பிலிபையர் மைக், ஸ்பீக்கர் மைக் ஸ்டாண்டு ஆகியவற்றை வழங்கினார். 

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில் 

                  'அமைச்சர் குறிஞ்சிப்பாடி பகுதியில் மக்களை சந்தித்த போது இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசு வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க வேண் டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அரசு வழங்குகிற நலத்திட்டங்கள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அகதி முகாமைச் சேர்ந்த செபஸ்டியானுக்கு திருமண உதவித்திட்டத்தில் 20 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior