நடுவீரப்பட்டு:
நடுவீரப்பட்டு அருகே இரு பிரிவினரிடையே ஏற் பட்ட மோதல் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே பெத்தாங்குப்பத்திற்கும், வானமாதேவிக்குமிடையே உள்ள சாலையில் பொது இடத்தில் கடந்த 16ம் தேதி குறிப்பிட்ட ஜாதியை குறித்து மர்ம ஆசாமிகள் சிலர் ஆபாசமாக திட்டி எழுதியிருந்தனர். இதனால் பெத்தாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் வானமாதேவி காலனி தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இந்நிலையில் நேற்று பெத்தாங்குப்பத்தை சேர்ந்த மலைவாசன் தனது வயலில் வேலை செய்வதற்காக வானமாதேவி காலனிக்கு ஆள் கூப்பிடுவதற்கு சென்றார். அவரை காலனியைச் சேர்ந்த சேட்டு, சுரேஷ், திருநாவுக்கரசு ஆகியோர் வழி மறித்து தாக்கினர். தகவல் அறிந்த பெத்தாங்குப்பம் கிராம மக்கள் வானமாதேவி காலனிக்கு சென்று தகராறு செய்தனர். இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வானமாதேவி காலனியை சேர்ந்த அய் யாவு, ஆறுமுகம், நாவப்பன் உள்ளிட்ட 10 பேர் மீதும், பெத்தாங்குப் பத்தை சேர்ந்த சின்னதுரை, கலியன், குணசேகரன் உள்ளிட்ட 10 பேர் மீதும் தனித்தனியே வழக்கு பதிந்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
download this page as pdf