உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

சிலம்பிமங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது அடக்குமுறை

 கடலூர்:

               கடலூரை அடுத்த சிலம்பிமங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு.திருமாறன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். சிலம்பி மங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் 200 குடும்பத்தினர் உள்ளனர். பிற சமூகத்தினர் 1500 குடும்பங்கள் உள்ளன. 
 
தாழ்த்தப்பட்ட மக்கள், சு.திருமாறன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனைச் சந்தித்து அளித்த மனு: 

               இக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இக்கிராமத்தில் இன்னமும் இரட்டைக் குவளை முறை நீடிக்கிறது. ரேஷன் கடை மற்றும் பள்ளிக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் கேலி செய்யப்பட்டும் சாதிய வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். பொதுப்பாதையில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கவும் அனுமதியில்லை. 

               இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தைப் பயன்படுத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நிலம், ஆறு, வாய்க்கால் மீன்பிடி உரிமை, மரங்கள் குத்தகை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மறுக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம் வட்டம் தெற்குத் திட்டை கிராமத்தில் 200 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உள்ளனர். இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். வத்தராயன்தெத்து கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 500 குடும்பங்களில் 300 குடும்பங்களுக்கு வீட்டுமனை இல்லை. ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி தரிசு நிலங்களைக் கைப்பற்றி, வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் திருமாறன் கூறியுள்ளார்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior