பண்ருட்டி:
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்கு அரசு நிர்ணய விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதால் நுகர்வோர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்திறகும் சமையல் எரிவாயு இணைப்பு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சமையல் காஸ் சிலிண்டர் களை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனை பெட்ரோலிய நிறுவனங்கள் நேரடியாக ஏஜென்சிகளை நியமித்து காஸ் இணைப்பு மற்றும் சிலிண்டர்களை வினியோகிக்கின்றனர். இதன்படி கடலூர் மாவட்டத்தில் 10 ஏஜென்சிகள் மூலம் சுமார் இரண்டு லட்சம் இணைப்புகள் உள்ளன. தற்போது தமிழக அரசு காஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு இலவசமாக காஸ் இணைப்புகளை வழங்கி வருகிறது. இதனால் காஸ் இணைப்புதாரர்களின் எண்ணிக்கை அதிகாரித் துள்ளதால் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட் டுப்பாட்டை பல ஏஜென்சிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சிலிண்டர்களுக்கு அரசு நிர்ணய கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.
வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றுக்கு 320 ரூபாய் 25 பைசா என பில் வழங்கப்படுகிறது. ஆனால் நகர பகுதி நுகர் வோர்களிடம் 335 ரூபாயிலிருந்து 340 வரையிலும், கிராம பகுதிகளில் 350 ரூபாயும் வசூலிக்கின்றனர். கூடுதல் கட்டணம் குறித்து கேட்டால் 'டெலிவரி' சார்ஜ் எனக் கூறுகின்றனர். இவை அனைத் திற்கும் மேலாக 21 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் எனக் கூறப்பட்ட போதிலும், ஒரு சில ஏஜென்சிகளை தவிர பெரும்பாலான ஏஜென்சிகள் 30 நாள் முதல் 40 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக கிராமப்பகுதி இணைப்புதாரர்களுக்கு பலமுறை அலைக்கழிக்கப்பட்ட பிறகே சிலிண்டர் வழங்கப்படுகிறது. கிராம காஸ் இணைப்புதாரர்கள் சிலிண்டர் பதிவு செய்வதற்காக அந்தந்த பகுதி ஏஜென்சிகள் கிளை அலுவலகங்களை திறந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கிளை அலுவலகங்கள் திறப்பதில்லை. பண்ருட்டியில் உள்ள ஒரு ஏஜென்சி புதிய இணைப்பு பெறும்போது இரு சிலிண்டருக்கு 2,500 ரூபாய்,லோடு சிலிண்டர் 2க்கு 642, புத்தகத்திற்கு 100ம், ரெகுலேட்டர் 150ம், டியூப் 70ம், இணைப்பு கட்டணம் 200ம் என மொத்தம் 3,662 மட்டுமே பெற வேண்டும். ஆனால் சிலிண்டர் இணைப்பு கட்டணம் மொத்தம் 3,662ம் காஸ் அடுப்பு 2,800ம்,குக்கர் 1,050ம், ரீபைண்ட் ஆயில் 5 லிட்டர் 350ம், மைசூர் சாண்டல் சோப், டிபன் கேரியர் சேர்த்து 8,200 பெற்றுக் கொண்டு இணைப்பு வழங்குகின்றனர். வெளியூர் மற்றும் மற்ற ஏஜென்சியில் இருந்து மாற்றம் செய்பவர்களிடம் 450 ரூபாய் கட்டாய வசூல் செய்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டாலும் கண்டுக் கொள்வதில்லை. கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பண்ருட்டியில் காஸ் இணைப்புதாரர் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சிலிண்டர் இணைப்பு புதிதாக பெறும் போது இணைப்பிற்கான தொகை மட்டுமே செலுத் தினால் போதும். வேறு எந்த பொருளையும் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோன்று சிலிண்டர் களுக்கு பில் தொகை மட் டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். ஆனால் பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து சிலிண்டர்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதே நிலைதான் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் நிலவி வருகிறது. மத்திய அரசு கிராமப் புற மக்களை மேம்படுத்த 110 ரூபாய் சிலிண்டருக்கு வழங்குகிறது. அதனை காஸ் நிறுவனங்கள் வெளி மார்க்கெட்டில் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.
பொதுமக்களின புகார் குறித்து பாரத் பெட்ரோலிய காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல மேலாளர் ஜெயராமனிடம் கேட்டபோது,
'சிலிண்டர் தேவையின் போது நுகர்வோர் கோரியபடி பதிவு செய்ய வேண்டும். சிலிண்டர் சப்ளையில் குறைபாடுகள் இருந்தால் நுகர்வோர் எங்களது தஞ்சாவூர் அலுவலக போன் 04362-221475, சேல்ஸ் ஆபிசர் மொபைல் எண். 94425-03567க்கு தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.
downlaod this page as pdf