பண்ருட்டி :
பண்ருட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை யாரும் நம்ப வேண்டாம் என சேர்மன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பண்ருட்டி சேர்மன் பச்சையப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பண்ருட்டி நகராட்சி எனது நிர்வாகத்தின் கீழ் துவங்கியது முதல் சுகாதாரம், மின்வசதி, குடிநீர் விநியோகம், சாலை வசதிகள், இணைப்பு சாலைகள், மழைநீர் வடி சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் நிதிமூலம் மண் சாலைகள் தார்சாலை, சிமென்ட் சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளது. ராஜாஜி சாலையில் சிறு மழையின் போது கூட வெள்ளம் போன்று மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. வாலாஜா வாய்க்கால் சீரமைக்கும் பணி பொதுப் பணித்துறையின் ஒத்துழைப்புடன் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய இணைப்பு சாலையான லிங்க் ரோடு துணை முதல்வர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவுரையின்படி 3 கோடி ரூபாய் மதிப்பில் இருபுறமும் மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்க பணிகள் நடக்கிறது. நகரில் 12 குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி மற்றும் 27 நேரடி இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. நகரின் 33 வார்டுகளிலும் 6 கோடி ரூபாய் அளவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க தி.மு.க., அரசுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் அ.தி.மு.க., வின் தவறான குற்றசாட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொது அறிவிற்கு:
மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து - புரதம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக