உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

காவிரி, ஒகேனக்கல் பிரச்னைகளுக்கு தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு: எடியூரப்பா


கடலூர்:
 
             ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறப்பதற்கு வசதியாக காவிரியில் தண்ணீர் விடுவது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்னை ஆகியவற்றுக்கு தமிழக, கர்நாடக அரசுத் தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக எடியூரப்பா வியாழக்கிழமை திருவந்திபுரம் வந்தார். 
 
கோயிலுக்குள் அவர்  கூறியது: 
 
             கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்து, மே இறுதியில் இரண்டாண்டு நிறைவு பெறுகிறது. மக்களுக்குப் பணிபுரிய மேலும் வலிமை வேண்டும். அதற்காக சாமி கும்பிட இங்கு வந்து இருக்கிறேன். இக்கோயில் மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. ஜூன் 3, 4 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. தகவல் தொழில் நுட்பம், உயிரியல் தொழில் நுட்பம், மின்சாரம், சுற்றுலா போன்ற துறைகளில் 4 லட்சம் கோடிக்கு அந்நிய முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் முதல் மாநாடு. இதற்காகவும் கோயிலில் பிரார்த்தனை செய்தேன். கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலையையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையையும் திறந்து வைத்தபிறகு, தமிழகம், கர்நாடகம் இடையே உறவு மேம்பட்டுள்ளது. கர்நாட மாநிலத்தின் மீது முதல்வர் கருணாநிதி மிகுந்த நட்பும், பாசமும் கொண்டுள்ளார். அவரது நட்புறவை நான் விரும்புகிறேன் ஜூன் 12-ம்  தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறப்பதற்கு ஏதுவாகக் காவிரியில் தண்ணீர் விடுவது குறித்தும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்தும், ஜூன் மாதம் நடைபெற இருக்கும் இரு மாநில தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் பேசித் தீர்வு காணப்படும். கர்நாடக அமைச்சர் ஹாலப்பா பிரச்னை சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் உள்ளது என்றார் எடியூரப்பா.
 
பொது அறிவிற்கு:

சிவாலிக் தொடரில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா நகர் - டேராடூன்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior