உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

சென்னை பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கக் கோரிக்கை

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கோரிக்கை விடுத்து உள்ளார்.  

கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலாளர் எம்.நிஜாமுதீன் செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:  

              நீராதாரங்களையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பாலித்தீன் பைகளுக்கு, உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களில், பல நகரங்களில் தடை உள்ளது. சுற்றுலாத்தலங்கள், மலைப் பிரதேசங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஆர்வம் உள்ள அலுவலர்கள் உள்ள பகுதிகளில், பாலித்தீன் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நெய்வேலி நகரியத்தில் பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

                 கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர்கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், கொளஞ்சியப்பர் கோயில், திருமுட்டம் பூவராகசாமி கோயில், உலகப் புகழ்பெற்ற பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் மற்றும் வீராணம் ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.  ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் கோயில்களுக்கும் பிற சுற்றுலாத் தலங்களுக்கும் வருகிறார்கள். இவர்கள் ஏராளமான பாலித்தீன் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். கடலூர் மாவட்ட ஆறுகள் உள்ளிட்ட நீராதாரங்கள் பாலித்தீன் பைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பாலித்தீன் குப்பைகளை அகற்ற வழியின்றி, நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் நாள்தோறும் அவற்றை எரிக்கிறார்கள். இதனால் காற்றில் நச்சு வேதியல் பொருள்கள் கலப்பதோடு, மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.  எனவே மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கடலூர் மாவட்டம் முழுவதும் பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொது அறிவிற்கு:


உடல் உஷ்ண நிலையை சீராக்குவது - தோல் 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior