கடலூர் :
'தமிழகத்தினுடனான தண்ணீர் பிரச்னை குறித்து, தலைமைச் செயலர்கள் அளவிலான பேச்சு வார்த்தை நடத்தப் பட்டு தீர்வு காணப்படும்' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.
'ஆந்திரா, தமிழகம் மாநிலங்களுடனான நீர் பங்கீட்டுப் பிரச்னையில், மத்திய அரசு தலையிட வேண்டும்' என, சில தினங்களுக்கு முன் கூறியவர், இப்போது தனது முடிவில், 'அந்தர்பல்டி' அடித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மற்றும் ஹயக்ரீவர் கோவில்களில், முதல்வர் எடியூரப்பா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார்.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் தரிசனம் முடிந்து கர்நாடகமுதல்வர் எடியூரப்பா கூறியதாவது:
கர்நாடகத்தில் பா.ஜ., அரசு 2ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து மக்களுக்கு சிறப்பான சேவை செய்வதற்காக சாமி தரிசனம் செய்ய வந்தேன். வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், கர்நாடகாவில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. ஐ.டி., பி.டி., எலக்ட்ரிசிட்டி, சுற்றுலா துறைகளில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சார்பில், 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை எதிர்பார்க்கிறோம். இந்த நோக்கமும் சிறப் பாக அமைய வேண்டும் என் பதே பயணத் தின் நோக்கம்.
திருவள்ளுவர் மற்றும் சர்வக்ஞர் சிலைகள் திறப்பு விழாவிற்கு பின், தமிழகத்தினுடனான உறவு சுமுகமாக உள்ளது. தமிழகத்துடனான தண்ணீர் பிரச்னை குறித்து, தலைமைச் செயலர்கள் அளவிலான பேச்சு வார்த்தை நடத் தப்பட்டு தீர்வு காணப்படும். ஹாலப்பா மீதான பிரச்னை குறித்து சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடியூரப்பா கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன், 'கர்நாடகத்திற்கும், தமிழகம், ஆந்திரா மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு பிரச்னையில், மத்திய அரசு தலையிட வேண்டும்' என்று கூறியவர், இப்போது, 'அந்தர்பல்டி' அடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவந்திபுரம் கோவிலில் தரிசனம் :
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலை புதுச்சேரி வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் கடலூர் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவிலுக்கு காலை 9.02 மணிக்கு வந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் உட்பட அதிகாரிகள் வரவேற்றனர். ஹவுசதகிரியில் உள்ள லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவிலுக்குச் சென்றார்.
முதல்வர் எடியூரப்பா வருவதற்கு 30 நிமிடங்கள் முன்பாகவே, திருவந்திபுரம் பஸ் நிறுத்தத்திலிருந்து வெளியாட்கள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக திருவந்திபுரத்தில் உள்ள கடைகள், எடியூரப்பா அங்கிருந்து கிளம்பும் வரை திறக்க அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் சென்ற பின், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பொது அறிவிற்கு:
ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள் - குளோரோ புளூரோ கார்பன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக