கடலூர் :
ஊரக மேம்பாட்டு இணைய கல்விக் கழக கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது.
சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஊரக மேம்பாட்டுக்கென இணைய கல்விக்கழகம் என்ற திட்டத்தினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கிராம பஞ்சாயத்துகளின் முழுபங்கேற்போடு அறிவு மையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்குத் தேவையான உள்ளூர் தகவல்கள் மற்றும் பயிற்சிகள் அளித்து வருகிறது.
குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் தாலுகாவில் நொச்சிக்காடு, மணிக்கொல்லை, சாமியார் பேட்டை, பரங்கிப்பேட்டை, முடசல் ஓடை, முழுக்குத்துறை மற்றும் எம். ஜி.ஆர்., நகர் ஆகிய பகுதிகளில் கிராம அறிவு மையங்கள் மூலம் மக்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, மண் பரிசோதனை முகாம், முதியோர் கல்வி, மீனவ நண்பன், செல்போன் வசதி, சுனாமி எச்சரிக்கை மின்னனு இயந்திரம், கண் பரிசோதனை முகாம் போன்ற பயிற்சிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் பரங்கிப்பேட்டை சமுதாயக் கூடத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வேல்விழி திட்ட விளக்கம் மற்றும் கிராம அறிவு மைய பகுதி பங்காளர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி பேசினார். திட்ட அலுவலர் இளங்கோவன் கிராம அறிவு மையங்களின் செயல்பாடுகள் குறித்து பகுதி பங்காளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
பொது அறிவிற்கு:
கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 7
0 கருத்துகள்:
கருத்துரையிடுக