உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

ரயில் மறியல் செய்ய முயன்ற மா.கம்யூ.,வினர் 105 பேர் கைது

கடலூர் : 

                     கடலூரில் ரயில் மறியல் செய்ய முயன்ற மா.கம்யூ., கட்சியினர் 105 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பான்பரி மார்கெட்டிற்கு மாற்றுப் பாதை அமைக்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். ஏற்கனவே சென்ற அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும். கல்லூரி, அலுவலக நேரங்களில் காலை, மாலை என சிதம்பரம், விழுப்புரம் செல்ல கூடுதல் ரயில் இயக்க வேண்டும். கடலூர் - புதுச்சேரி - திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன் தலைமையில் மா.கம்யூ.,வினர், கட்சி அலுவலகத்திலிருந்து திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.லாரன்ஸ் ரோடு ரயில்வே கேட் அருகே வந்த போது, டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தியதால் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதியம் 12.08 மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனை கடந்து சென்றது. இதனைத் தொடர்ந்து அனைவரும் ரயில் பாதையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களிடம் பேச் சுவார்த்தை நடத்தியும், மறியலில் ஈடுபட முயன்ற 105 பேரை கைது செய்தனர். ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒவ்வொரு பெட்டிக்கும் இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior