உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

பொதுத்தேர்வு தேர்ச்சியை 5 சதவீதம் உயர்த்த நடவடிக்கை: சி.இ.ஓ.,

கடலூர் : 

                     பிளஸ் 2, எஸ்.எஸ். எல்.சி., தேர்வில் இந்த ஆண்டு 5 சதவீதம் தேர்ச் சியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சி.இ.ஓ., தெரிவித்தார். கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி நேற்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்து ஆய்வு மேற் கொண்டார்.ஆய்வின் போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை பார்வையிட்டு எஸ்.எஸ். எல்.சி., மற்றும் பிளஸ் 2வில் பள்ளி அளவில் முதல் மதிப் பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார். மேலும் பசுமை படை சார்பில் ஒருங்கிணைப்பாளர் பழனி முன்னிலையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட் டது. நிகழ்ச்சியில் டி.இ.ஓ., கணேசமூர்த்தி, அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் ஆஷா கிருஸ்டி, பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் சாம், ஆசிரியர்கள், மாணவர்கள் உட் பட பலர் பங்கேற்றனர்.


பின்னர் சி.இ.ஓ., கூறுகையில், 

                   "மாவட்டத்தில் சேமக்கோட்டை மற்றும் சிதம்பரம் பச்சையப்பா பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி 35 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். மேலும் சேமக் கோட்டையில் நிதியுதவி பெறும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால் ஆசிரியர்களுக்கு மூன்று "இன்கிரிமென்ட்டை கட்' செய்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் நடப் பாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியை 5 சதவீதம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி பள்ளியில் காலியாக இருந்த கணித ஆசிரியர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior