கடலூர் : 
                     கடலூர் மாவட்டத்தில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைய விளக்க பாடல் "சிடி' அலுவலர்கள் வாங்கி விளம்பரம் செய்ய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
                       இம் மாதம் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட் டிற்கான மைய விளக்க பாடல் கொண்ட "சிடி' தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இந்த பாடல் "சிடி' மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மேல்நிலைப் பள்ளிகள், உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசு அலுவலகங்களில் தலைமை அலுவலர்கள் உடனடியாக ஒப்புதல் கடிதத்துடன் தனி நபர் வாயிலாக மாவட்ட கலெக் டர் அலுவலகத்திலுள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஞாயிறு நீங்கலாக வேலை நேரத்தில் மைய விளக்க பாடலின் "சிடி' பெற்று விளம்பரப்படுத் துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக