உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலப் பணி முடிவது எப்போது? போக்குவரத்து நெரிசலில் விழி பிதுங்கும் விருத்தாசலம்

விருத்தாசலம் : 

                 விருத்தாசலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பால பணி தொடர்ந்து ஆமை வேகத்தில் நடப்பதால் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதோடு, அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  விருத்தாசலத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடலூர் ரோட்டில் குப்பநத்தத்தில் இருந்து வேப் பூர் ரோட்டில் உள்ள மணலூர் வரை 9.1 கி.மீ., தூரத்திற்கு "தமிழ்நாடு ரோடு செக்டார் ப்ராஜெக்ட்' மூலம் புறவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டு 2010 ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக குப்பநத்தத்தில் இருந்து மணலூர் இடைப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் முழுவதும் முடிவடைந்தது. அதுபோல் மணிமுக்தா ஆற்றில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணியும் முடிவடைந்து தற்போது போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. புறவழி சாலை ரயில் பாதையை கடந்து செல்வதால் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி ரயில்வே நிர்வாகம் மூலம்தான் இது போன்ற கட்டுமான பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காக ரயில்வே மேம்பாலம் அமைக்க 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ப்பட்டு "இர்கான்' எனப்படும் இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷனிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. ஒப் படைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணி முடியாமல் இன்று வரை தொடர்ந்து ஆமை வேகத்திலேயே பணி நடந்து வருகிறது. இதுவரை பில்லர் அமைக் கும் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இதனால் வேப்பூர், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் இருந்து கடலூர் நோக்கிச் செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகரத்திற்குள் வந்து செல்லும் நிலையே உள்ளது.

                      குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியான கடைவீதி வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. தற்போது விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் ரயில்வே மேம்பால பணி தொடங்கப்பட்டுள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்களும் விருத்தாசலம் நகரத்தின் வழியாக செல்லும் வகையில் மாற்றி விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவிற்குள் புறவழிசாலை பணி முடித்திருந்தால் வேப்பூரில் இருந்து கடலூர் நோக்கி வரும் வாகனங்கள் நகரத்தை தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சென்றிருக்கும். அந்த வகையிலாவது நகரத்தில் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்பிருந்திருக்கும். தினம், தினம் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், அதனால் ஏற்படும் விபத்துகளை தவிர்க் கும் வகையில் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior