உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

நல்ல பி.இ. கல்லூரிகள் எவை? மாணவர்களே தேர்வு செய்ய வசதி- அமைச்சர் பொன்முடி தகவல்


                    நல்ல, தரமான பி.இ. கல்லூரிகளை மாணவர்களே தேர்வு செய்ய வசதியாக, கல்லூரிகள் பற்றிய தகவல்கள் www.tndte.com என்ற தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் தகுதி போன்ற தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி கூறினார். 

                         பி.இ. கலந்தாய்வுக்கு முன்பு, கல்லூரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வசதியாக, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று அது பற்றிய விவரங்களைச் சேகரிக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள், பெற்றோர் கல்லூரிகளின் நுழைவு வாயிலிலேயே நிறுத்தப்படுகின்றனர். அதனால் கல்லூரிகள் பற்றிய உண்மை நிலையை அவர்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.  அவர்கள் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் சேர்ந்த பின்னர், தங்கள் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லை, ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை, தங்களை வேறு ஒரு கல்லூரிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றில் புகார் செய்கின்றனர். மாணவர்கள் இவ்வாறு அவதிப்படுவதைத் தவிர்க்கும் வகையில் கல்லூரிகளைப் பற்றிய உண்மை விவரங்கள் அதாவது கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களின் தகுதி போன்ற விவரங்கள் அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தினமணியில் கடந்த 3-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.இ. விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வாய்ப்பு (ரேண்டம்) எண்களை வழங்கினார். 

அதன் பின்னர் அமைச்சர் கூறியது: 

                    நாட்டில் இருக்கின்ற பொறியியல் கல்லூரிகளை  மேம்படுத்துவது, புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவது ஆகியவற்றில் ஏ.ஐ.சி.டி.இ. புதிய நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள சில கல்லூரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன. அதனால் ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பின் தென் மண்டல கல்லூரிகள் பற்றிய விவரங்கள் அந்த அமைப்பின் இணையதளத்தில் இல்லை.  எனவே, மாணவர்கள் நல்ல கல்லூரிகளைத் தேர்வு செய்ய வசதியாக, கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், அவற்றில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு தகுதி வழங்குவதற்காக, அண்ணா பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆய்வு செய்து, கல்லூரிகளில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை அவர்களின் தகுதி போன்ற விவரங்களைச் சேகரித்துள்ளன. அந்த விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும். அரசு ஒதுக்கீட்டிலேயே தேவையான பி.இ. இடங்கள் உள்ளன. எனவே, பி.இ. இடம் வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior