உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

பி.இ: ஜூலை 5-ல் பொதுப்பிரிவு கவுன்சலிங்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் ரேண்டம் எண்களை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உயர்கல்வித் துறை அமைச்சர்

                             லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், பி.இ. பொதுப்பிரிவு கவுன்சலிங் ஜூலை 5-ம் தேதி தொடங்குகிறது. பி.இ. கவுன்சலிங் தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெறுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1.67 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண்களை உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கம்ப்யூட்டர் மூலம் 2 நிமிஷங்களில் செவ்வாய்க்கிழமை வழங்கினார். பி.இ. படிப்புகளில் சேருவதற்கு 2 லட்சத்து 2 ஆயிரத்து 133 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இவற்றில் அகாதெமி பிரிவில் 95 ஆயிரத்து 600 மாணவர்கள், 65 ஆயிரத்து 917 மாணவிகள் என 1 லட்சத்து 61 ஆயிரத்து 517 விண்ணப்பங்களும், தொழிற்பிரிவில் 5 ஆயிரத்து 634 மாணவர்கள், 255 மாணவிகள் என 5,889 பேர் என  மொத்தம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பத்துள்ளனர்.   
ஜூன் 18-ல் ரேங்க் பட்டியல்:  
                 பி.இ. தரவரிசைப் பட்டியல் ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படும். இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதை அடுத்து ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பாக ஒரே நாளில் முதலாண்டு பி.இ. வகுப்புகள் தொடங்கப்படும்.  அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் நடத்தப்படவுள்ள தமிழ் வழி சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளுக்கான புத்தகங்கள் வகுப்புகள் தொடங்குவதற்குள் வெளியிடப்படும் என்றார் அவர். 
எந்தெந்த பிரிவினருக்கு எப்போது கவுன்சலிங்? 
விளையாட்டு வீரர்கள் - ஜூன் 28
தொழிற்பிரிவு மாணவர்கள் - ஜூன் 29 முதல் ஜூலை 3
மாற்றுத் திறனாளிகள் - ஜூலை 4
பொதுப்பிரிவு மாணவர்கள் - ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 5
பிற மாநில மாணவர்கள் - ஜூலை 17

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior