உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

பி.இ.: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை

             இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1 லட்சத்து 67 ஆயிரத்து மாணவர்களில், 78,086 பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெற ஆர்வம் உள்ளவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  இத்தகைய பி.இ. முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் மாணவர்கள் 49,143 பேர்; மாணவிகள் 28,943 பேர். 

                   மொத்தம் விண்ணப்பித்தவர்களில், இவர்களது எண்ணிக்கை விகிதம் 47 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.  பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கும் நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்தத் தகவலை வெளியிட்டார்.  இதேபோன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதி உள்ளதாக ஏற்கப்பட்டுள்ள 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில், 6,440 மாணவ-மாணவியர் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெற ஆர்வம் உள்ளவர்கள். 

கல்விக் கட்டணம் கிடையாது:  

                   இத்தகைய முதல் தலைமுறை மாணவர்கள், பி.இ. படிப்பில் சேர்ந்தாலோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தாலோ ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.  பி.இ. படிப்பில் அரசு கல்லூரியைப் பொருத்தவரை இத்தகைய மாணவர்கள் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.7,500 செலுத்தத் தேவை இல்லை. சுயநிதி கல்லூரிகளைப் பொருத்தவரை ஆண்டு கல்விக் கட்டணத்தைச் செலுத்தத் தேவை இல்லை. எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-ல், கல்விக் கட்டணமாகிய ரூ.4,000-த்தை இத்தகைய மாணவர்கள் செலுத்தத் தேவை இல்லை. 

ரூ.1.25 லட்சம் தள்ளுபடி:  

                       சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவ-மாணவியர் சேரும் நிலையில், ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சம் செலுத்தத் தேவை இல்லை என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior