உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

கடலூர் மாவட்டத்தில் ரூ.160 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள்: அன்பழகன்

சிதம்பரம் : 

                   கடலூர் மாவட்டத்தில் 160 கோடி ரூபாய் செலவில் வெள்ளத் தடுப்பு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக சென்னை பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அன்பழகன் தெரிவித்தார்.

                      கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் காவிரி டெல்டா பாசன பகுதியில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள் 56 பிரிவுகளாக நடக்கிறது. மேட்டூரில் தண்ணீர் திறப்பதற்குள் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை பொதுப்பணித்துறை நீர்வள பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் பார்வையிட்டார்.

பின்னர் சென்னை பொதுப்பணித்துறை நீர்வள பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் கூறியதாவது: 

                       வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பே பாசன வாய்க்கால் தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 15க்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் இருப்பதால் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும். இதுவரை நடந்த பணிகளில் முழுமையாக திருப்தி என கூற முடியாது. ஆனால் சில இடங்களில் மிக சிறப்பாக நடந்துள்ளது. மேலும் வாய்க்கால் கரைகள் கரையாமல் தடுக்க கரையை சரிவாக அமைப்பதுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் கரை பலப்படுத்தப்படுகிறது.புதிய வீராணம் திட்டத்தில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வீராணம் மதகுகள் சீரமைப்பு மற்றும் பகிர்மான கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் பகுதியில் நிரந்தரமாக வெள்ள பாதுகாப்பு பணிகளுக்காக 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கரைகள் பலப்படுத்துதல், தடுப்பணை கட்டுதல், வடிகால் வாய்க்கால்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.கொள்ளிடக்கரை கீழணையில் இருந்து சிதம்பரம் வரை 60 கி.மீ., தூரம் கரையை பலப்படுத்தி சாலை அமைக்க 108 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாராக உள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்.இவ்வாறு அன்பழகன் கூறினார். கடலூர் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற் பொறியாளர்கள் பெரியசாமி, கலியமூர்த்தி, முருகவேல், லால் பேட்டை உதவி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior