உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

1.50 லட்சம் பொறியியல் விண்ணப்பங்கள் குவிந்தன

               தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேர 1.50 லட்சம்  மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை செயலர் அலுவலகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புக் கவுன்ட்டர்கள் மூலம்  கடைசி நாளான திங்கள்கிழமை (மே 31) மட்டும் 30 ஆயிரம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்தனர்.

               இவர்களில் 12 ஆயிரம் பேர் நேரடியாக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக சிறப்புக் கவுன்ட்டர்களில் விண்ணப்பத்தை கொடுத்தனர். மாணவர்களின் வசதிக்காக திங்கள்கிழமை (மே 31) இரவு 8 மணி வரை சிறப்புக் கவுன்ட்டர்கள் மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தபாலில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் தாமதமாக வந்தாலும், மே 31-ம் தேதி அஞ்சல் முத்திரை இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

1.72 லட்சம் பி.இ. இடங்களுக்கு...: 

                 அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி பொறியியல் கல்லூரி உள்ட்ட அரசு பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் உள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 445 பி.இ. இடங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

ஜூன் 18-ல் ரேங்க் பட்டியல்: 

                கடந்த மே 3-ம் தேதி முதல் பி.இ. விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. மொத்தம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வரும் ஜூன் 15-ம் தேதி சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படும். வரும் ஜூன் 18-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் 28-ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior