உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

கடலூர் அரசு பொது மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட அவசர சிகிச்சை மையம் திறப்பு

கடலூர் : 

                    கடலூர் அரசு பொது மருத்துவமனையில் 6 லட்ச ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கலெக்டர் திறந்து வைத்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவு கட்டடங்கள், பழுதடைந்த நிலையிலிருந்ததை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு நவீனப்படுத்த பொதுப்பணித் துறைக்கு சிபாரிசு செய்தார். அதன் பேரில் பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) செயற்பொறியாளர் மனோகரன், அரசு பொது மருத்துவமனை பராமரிப்பு நிதியிலிருந்து 6 லட்ச ரூபாய் செலவில் தரைத்தளங்கள், ஜன்னல்கள், மின்சாதனங்கள் அவசர சிகிச்சைக்கு தேவையான பிராணவாயு குழாய்கள், குளுகோஸ் குழாய்கள் உள்ளிட்டவை அமைத்து நவீனப்படுத்தப்பட்டது. அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் பங்கேற்று அவசர சிகிச்சைப்பிரிவை நேற்று திறந்து பேசுகையில் "இப் பிரிவில் 23 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர கால சிகிச்சைக்கு கொண்டு வரும் நோயாளிகளை தன்மைக்கு ஏற்றாற் போல் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. எக்ஸ்ரே, இருட்டறை, நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைப்பிரிவு தனியார் மருத்துவமனைக்கு நிகராக நவீனப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.  நிகழ்ச்சியில் டி.ஆர். ஓ., நடராஜன், இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரக்குமார், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மனோகரன், கண்காணிப்பாளர் பரஞ்ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior