உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

என்.எல்.சி தொ.மு.ச,- பா.தொ.ச, வேலை நிறுத்த நோட்டீஸ்

நெய்வேலி : 

              என்.எல்.சி., நிர்வாகத்திடம் தொ.மு.ச.,வும், பா.தொ.ச.,வும் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளனர். புதிய ஊதிய மாற்று ஒப்பந்தப்படி 2007ம் ஆண்டு ஜனவரி முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்களும், 2010ம் ஆண்டு ஜனவரி முதல் தான் வழங்க முடியும் என என்.எல்.சி., நிர் வாகமும் கூறி வருகின்றனர்.

                  இந்த முரண்பாட்டிற்கு தீர்வு ஏற்படாவிட்டால் வரும் ஜூன் 14ம் தேதி இரவு பணி முதல் தொ. மு.ச.,வும் பா.தொ.ச.,வும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர் என்பதில் உறுதியாக உள்ளது. இப்பிரச்னையில் இறுதி முடிவு ஏற்படாததால் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொ.மு.ச.,வும் பா.தொ.ச.வும் நேற்று மாலை என்.எல்.சி., நிர்வாக பர்சனல் முதன்மை பொது மேலாளரிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர். இதற்கிடையே பேசி முடிக்கப்பட்டுள்ள ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து பகிரங்கமாக தெரியப்படுத்திய பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தான் ஒப்பந்தம் கையெழுத்து ஆக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து சி.ஐ.டி.யூ.,- எச்.எம். எஸ்., - மூ.தொ.ச., - அ.தொ. ஊ.ச., உள்ளிட்ட அங்கீகாரம் பெறாத தொழிற் சங்கங்கள் நாளை 2ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்கப் போவதாக சி.ஐ.டி.யூ., பொதுச் செயலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதம்

                    பணி காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளான 20 பெண்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு என்.எல். சி.,யில் நிரந்தர வேலை வாய்ப்பை தொ.மு.ச., வினர் வாங்கி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தொ.மு.ச., அலுவலக வளாகத்திற்குள்ளேயே நேற்று காலை திடீர் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior