கடலூர் :
புதுச்சேரி பதிவு வாகனங்களுக்கு சாலை வரி செலுத்த நேற்று கடைசி நாள் என்பதால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.சாலை வரி செலுத்தாத புதுச்சேரி மாநில பதிவு வாகனங்கள் கடலூர் மாவட்டத்தில் இயங்கின. வாகன தொகையில் 8 சதவீதத்தை சாலை வரியாக செலுத்த வேண்டும். இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 3ம் தேதி முதல் வட்டார போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் புதுச்சேரி மாநில பதிவு வாகனங்களை பிடித்து சாலை வரி வசூலித்தனர்.இந்நிலையில் புதுச்சேரி மாநில பதிவு வாகனங்கள் மே 31ம் தேதிக்குள் சாலை வரி செலுத்த வேண்டும். ஜூன் 1ம் தேதி முதல் சாலை வரி 15 சதவீதமாக செலுத்த வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று மே மாதம் 31ம் தேதி கடைசி நாள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில பதிவு வாகனங்கள் வைத்திருந்தவர்கள் சாலை வரி கட்டுவதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் 2 மணி வரை 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக