கடலூர் :
புகைப்பழக்கம் ஆரம்பத்தில் ஆனந்தமாக இருந்தாலும் பின்னர் ஆபத்தில் முடியும் என இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் பேசினார். உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி பிரஜா பிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா சார்பில் கடலூரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் ரவி தலைமை தாங்கினார்.
இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு பேசிய தாவது:
புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. சிகரெட்டில் 501 நச்சு பொருட்கள் உள்ளன. இது ஆக்ஸிஜனுடன் கலந்து திசுக்களை மாற்றமடைய செய்து நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. புகைப்பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்த முடியாது.நோய் பாதிப்பு ஏற்பட் டவர்கள் 5 அல்லது 6 மாதங்களில் இறந்து விடுவார்கள். முதலில் சிகரெட் பிடிப்பது ஆனந்தமாகத்தான் இருக்கும். பின்னர் அது ஆபத்தாக முடியும். அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பேர் புகைப்பிடிப்பதால் மரணமடைகின்றனர். மேலும் கை, கால், சக்தி இழந்துவிடும், மூலையில் ரத்தகசிவு, மாரடைப்பு போன்றவை ஏற்படும். புகைப்பதனால் உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 2,200 பேர் இறக்கின்றனர். ஆண்டிற்கு மூன்று மில்லியன் இறப்புகள் ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. விழிப்புணர்வு முகாம்கள் மூலம் புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு இணை இயக்குனர் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக