உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

எறையூரில் தேர்த் திருவிழாவை நடத்திய காவல்துறையினர்

உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூரில் நடைபெற்ற புனித ஜெபமாலை அன்னை தேரோட்டம்.
உளுந்தூர்பேட்டை:

           உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூரில் உயர் நீதிமன்ற ஆணையின்படி மிகுந்த சர்ச்சைக்கிடையே தேர் திருவிழாவை காவல்துறையினர் நடத்தினர். உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூரில் புனித ஜெபமாலை அன்னை தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தேரோட்டம் தலித் கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிவரை சென்றுவர வேண்டும், அவர்களையும் திருவிழாவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எஸ்.சிவஞானம், டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது.அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தேரோட்டம் நடைபெற்றது. அமைதிக்குழு கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டாலும் அவர்களிடையே ஒற்றுமை நிலவுவதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நான்கு தேர்கள் செல்லவேண்டிய வீதியில் 2 சிறிய தேர்களே வீதியுலா சென்றன.ஒவ்வொரு ஆண்டும் தேர்களை ஊர் பொதுமக்களை தூக்கிச் செல்வர். ஆனால் இந்த ஆண்டு இரு பிரிவினரும் சேர்ந்து திருவிழா நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதால் தேர்களை தூக்கி செல்வதற்கு ஊர் மக்கள் இரு தரப்பினரில் யாரும் முன் வரவில்லை. அதனால் காவல்துறையினரே தேரை தூக்கிச் செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். தேர்கள் முறையான பாதையில் செல்லாததால் இரு தரப்பு மக்களிடையே இரவு முழுவதும் பரப்பரப்பான சூழ்நிலை நிலவியது. இரு பிரிவினருக்கிடையே பதற்றம் நிலவியதால் விடிய விடிய பவனி வரவேண்டிய தேரை காவல்துறையினர் விரைந்து முடித்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். இவ்விழாவுக்கு மாவட்ட எஸ்.பி. பகலவன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி. மார்ட்டீன், டி.எஸ்.பி.க்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior