உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை: சிதம்பரம் மகப்பேறு பிரிவில் பெண்கள் தவிப்பு

சிதம்பரம் : 

                சிதம்பரம் அரசு மருத்துவமனையில் விலை உயர்ந்த ஜெனரேட்டர்கள் இருந்தும் பயன்படுத்தப்படாததால் மின்சாரம் இல்லாத நேரங்களில் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மகப்பேறு வார்டுகளில் காற்றுக்காக பச்சிளம் குழந்தைகளை வெளியில் கொண்டு வந்து வைத்திருக்கும் அவல நிலை உள்ளது.

                        சிதம்பரத்தில் காமராஜ் அரசு மருத்துவமனையில் மகப்பேறு, தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை, எலும்பு முறிவு, சித்தா என அனைத்து பிரிவுகளும் உள் ளது. ஆபரேஷன் தியேட் டர் உள்ளது. மகப்பேறு மற்றும் பெண்களுக்கென 100 படுக்கை வசதிகளுடன் விஸ்தாரமான புதிய மருத்துவமனை கட்டடம், அவசர சிகிச்சை பிரிவிற் கென தனிக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டட வசதி, மருந்து சப்ளை, மருத்துவ உபகரணங்கள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்காத நிலையே நீடித்து வருகிறது. நோயாளிகளுக்கு பாதுகாப்பில்லாததால் இரவு நேரங்களில் நோயாளிகள் அச்சத்துடன் தங்கியிருக்க வேண்டிய நிலை உள்ளது.

                     கடந்த இரு வாரங்களுக்கு முன் குடிநீர் இன்றி நோயாளிகள் தவித்தனர். ஆனால் தற்போது மின்சார நிறுத் தம் பிரச்னையில் நோயாளிகள் தவித்து வருகின்றனர். தற்போது மின் பற்றாக்குறை காரணமாக கடந்த சில மாதங்களாக நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டு தற்போது இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சீரமைப்பு பணி என இடையிடையே மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மின்சாரம் இல்லாத நேரங்களில் முக்கிய ஆபரேஷன் மற்றும் நோயாளிகள் பாதிப்படையாமல் இருக்க சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வாங்கப்பட்டது. அந்த ஜெனரேட்டர் முக் கால்வாசி நேரம் பழுதிலேயேதான் இருக்கும்.

                   இந்நிலையில் புதியதாக கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கென இரு உயர்ந்த ஜெனரேட்டர்கள் புதியதாக வழங்கப்பட்டன. அந்த ஜெனரேட்டர்களுக்கு இணைப்பு கொடுத்து மின்சாரம் இல் லாத நேரங்களில் இயக்கப் பட்டது. ஆனால் அதை இயக்குவதற்கு போதுமான அளவு டீசல் செலவை அரசு வழங்குவதில்லை என காரணம் கூறி ஜெனரேட்டர் இயக்குவதை நிறுத்தி விட்டனர். அவசர ஆபரேஷன் செய் யும் நேரங்களில் மட்டும் இயக்கி நிறுத்திக் கொள் கின்றனர். இதனால் மின் சாரம் இல்லாத நேரங்களில் உள்நோயாளியாக உள்ளவர்கள் காற்று இல் லாமல் வெயிலின் தாக்கத் தால் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். மகப்பேறு பிரிவில் உள்ள பெண்கள் பச்சிளம் குழந்தைகளுடன் தவிக் கின்றனர்.

                 குழந்தைகளை வைத்துக் கொண்டு மருத் துவமனை வளாகத்திற்கு வெளியே வரும் நிலை உள்ளது. கடந்த சில மாதங் களாகவே நீடித்து வரும் நிலையிலும் மின்சாரம் இல்லாத நேரங்களில் ஜெனரேட்டரை இயக்காததால்ஜெனரேட்டர்கள் காட்சிப் பொருளாக உள்ளது. பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில், டீசல் வாங்க ஒதுக்கீடு இல்லை என்ற காரணம் கூறி, சிதம்பரம் மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயக்கப்படாமல் நோயாளிகளை அவதியடையச் செய்வது ஏற்புடையதல்ல.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior